சென்னை: சென்னை மாநகரின் மிகப்பெரிய, ஒருங்கிணைக்கப்பட்ட நகரியமான எஸ்பிஆர் சிட்டி, இந்தியாவின் மிகப்பெரிய ஆபரண சங்கிலித்தொடர் நிறுவனங்களுள் ஒன்றாக ஜோய்அலுகாஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டிருப்பதை இன்று அறிவித்திருக்கிறது, இந்த இரு நிறுவனங்களின் உயரதிகாரிகள் மற்றும் விருந்தினர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் எஸ்பிஆர் சிட்டி – ல் 20,000 சதுரஅடிக்கும் அதிகமான கட்டிடப் பரப்பளவில் ஷோரூமை நிறுவும் முதல் ஜுவெல்லரி நிறுவனம் என்ற பெருமையை ஜோய்அலுகாஸ் பெறுகிறது.
சென்னையின் மிகப்பெரிய ஒருங்கிணைக்கப்பட்ட நகரியம் என்ற பெருமைக்குரிய எஸ்பிஆர் சிட்டியில், சென்னையிலேயே மிக உயரமான குடியிருப்பு டவர்கள், தனித்துவமான சொகுசு பங்களாக்கள் மற்றும் ஸ்ரீராம் யுனிவர்சல் ஸ்கூல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
எஸ்பிஆர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு, ஹித்தேஷ் கவாத் பேசுகையில், “எமது நகரிய செயல்திட்டத்தில் பிரபல ஆபரண பிராண்டான ஜோய்அலுகாஸ் அதன் ஷோரூமை நிறுவுவது எஸ்பிஆர் – ல் உள்ள எங்களுக்கு மிகப்பெரிய பெருமைக்குரிய விஷயமாகும். இந்தியாவில் அதிக புகழ்பெற்ற மற்றும் மக்களின் ஆழமான நம்பிக்கையைப் பெற்ற ஆபரண நிறுவனங்களுள் ஒன்றாக ஜோய்அலுகாஸ் திகழ்வது யாவரும் அறிந்ததே. எனவே, எஸ்பிஆர் சிட்டியில் ஷோரூமை நிறுவும் முதல் ஆபரண நிறுவனமாக ஜோய்அலுகாஸ் – ன் வருகை குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன். எஸ்பிஆர் சிட்டிக்குள் மிகச்சிறந்த வசதிகளும், நாடெங்கிலும் புகழ்பெற்ற முதன்மையான ரீடெய்ல் நிறுவனங்களும் இடம்பெறும் என்ற எமது வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.” என்று கூறினார்.
தமிழ்நாட்டில் மார்க்கெட் ஆஃப் இந்தியா டிரேடு ஆர்கனைசேஷன் என்பதன் தொடக்கம் குறித்து பேசிய திரு. ஹிதேஷ், “சமுதாயத்திடமிருந்து பெறுவதை சமுதாயத்திற்கே திரும்பத் தரும் கோட்பாட்டை நாங்கள் எப்போதும் நம்புகிறோம். அரசுசாரா ஒரு தொண்டு நிறுவனத்தை நிறுவ (என்ஜிஓ) வேண்டுமென்று நாங்கள் விரும்பியபோது வசதியற்றவர்களுக்கு உணவு, உடை அல்லது தங்குமிட வசதி போன்ற தற்காலிக ஆதரவை வழங்கும் செயல்பாட்டிலிருந்து மாறுபட்டதாக இருக்க நாங்கள் முடிவு செய்தோம். இச்சமுதாயத்தில் வேலைவாய்ப்பை தேடுபவர்களாக இல்லாமல், வேலைவாய்ப்பை வழங்குபவர்களாக முன்னேற்றம் காணக்கூடிய ஒரு தலைமுறையை எங்களது என்ஜிஓ உருவாக்க வேண்டுமென்று நாங்கள் முடிவு செய்தோம். தமிழ்நாடு, மார்க்கெட் ஆஃப் இந்தியா டிரேடு ஆர்கனைசேஷன், ஆர்வம் கொண்ட வர்த்தகர்களுக்கு அவர்களது பொருளாதாரமானது, வளர்ச்சி பெறுவதற்கு மட்டுமின்றி, அவர்களது எதிர்கால தலைமுறையினரும் அதன் பலன்களை அனுபவிக்கும் விதத்தில் அவர்கள் திறனதிகாரம் பெறுவதற்கு உதவும். எமது இந்த அறக்கட்டளை நிறுவனத்தின் மூலம் கீழ்வருபவற்றை சிறிய வணிகர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் வழங்குவதே எமது நோக்கமாகும்.:

  1. பயிற்சி மற்றும் மேம்பாடு
  2. அரசு கொள்கைகள், திட்டங்கள் மற்றும் வங்கி வழங்கும் வசதிகள் குறித்த விழிப்புணர்வு
  3. வர்த்தகத்தின் எதிர்காலம் குறித்து வெள்ளை அறிக்கைகளை வெளியிடுதல்
  4. பிணைப்புகளை உருவாக்கிக் கொள்வதற்கான நிகழ்வுகளை நடத்துவது
  5. வர்த்தக ஆய்விதழ்கள் மற்றும் இதழ்களை பிரசுரிப்பது
    இப்பிராந்தியத்தில் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட வர்த்தகத்தை ஏதுவாக்கும் மார்க்கெட் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து நடப்பு நிலையை சிறப்பானதாக மாற்றுவதாக இந்த அறக்கட்டளை நிறுவனம் இருக்கும்.”
    “ஜோய்அலுகாஸ் குழுமத்தின் தலைவர் திரு. ஜோய் அலுகாஸ் பேசுகையில், “எஸ்பிஆர் சிட்டியில் ஷோரூம் முதல் ஜுவெல்லரி நிறுவனமாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த அமைவிடத்தில் சிறப்பான பிசினஸ் வாய்ப்பு இருப்பதை நாங்கள் காண்கிறோம். இங்கு அமையவிருக்கும் எமது ஷோரூம், மிகச்சிறப்பாக இயங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சென்னை மாநகரம் ஜோய் அலுகாஸ் – க்கு சிறப்பான அமைவிடமாக தொடர்ந்து இருந்து வருகிறது. எனவே, இம்மாநகரில், எமது விற்பனையகங்களின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்க நாங்கள் திட்டங்களை வகுத்திருக்கிறோம்.எஸ்பிஆர் சிட்டி என்பது, அதிக நம்பிக்கையளிக்கும் மற்றும் பிசினஸ்க்கான பெரிய சாத்தியத்திறன் கொண்ட செயல்திட்டம் என்பதில் ஐயமில்லை. இதன் ஒரு அங்கமாக இடம்பெறுவது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்று கூறினார்.
    எஸ்பிஆர் சிட்டியில் இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை மற்றும் மொத்த விற்பனை சந்தையும் இடம்பெறுகிறது. மார்க்கெட் ஆஃப் இந்தியா என்ற பெயர் கொண்ட இச்சந்தையில் 5000 கடைகள் இருக்கின்றன. 10,000 வாகனங்களை நிறுத்துவதற்கான இடவசதி, 9 முக்கியமான மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனைக்கான சந்தைகள், 1.5 ஏக்கர் பரப்பளவில் அமையும் மாபெரும் மைய முற்றம் மற்றும் 7 சிறிய முற்றங்கள் ஆகியவையும் இங்கு அமையவிருக்கின்றன. இதன்மூலம் சென்னை மாநகரில் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட வர்த்தகத்திற்கு மிகச்சிறந்த திருப்புமுனையாக இது இருக்கும்.

By Admin