சென்னை – மார்ச், தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி 109 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுகன்யா செல்வம் ஏற்பாட்டில் 2000 மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை சூளைமேடு கில்நகர் விளையாட்டுத் திடலில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப..சிதம்பரம் கலந்து கொண்டு மகளிருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் அருள் பெத்தையா, ஜி.கே‌.தாஸ், கராத்தே செல்வம், வட்டத்தலைவர் மோகன், பாஸ்கரன், அமிர்தராஜ், கோட்டையன், கராத்தே இளங்கோ, அஜிலேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

மேடையில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கூறியதாவது,

இப்பொழுது பெண்களுக்கு பாராளுமன்றத்தில் 33% சதவீதம் என்பதற்கு சந்தோஷப்பட வேண்டாம். அது தவறான பிரிவு, மக்கள் கணக்கெடுப்பு தொகுதி சீரமைப்பின் பிறகே 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் என்று தெரிவித்துள்ளார்கள் இது எப்படி இருக்கிறது என்றால் தண்ணீர் எப்போது வரும் என்று கேட்டால் சந்திராயனை அனுப்பி நிலாவில் கிணறு தோண்டி கிணறில் இருந்து பைப்பை போட்டு வீட்டிற்கு தண்ணீர் தருவது போல உள்ளது.

தொகுதி சீரமைப்பது என்பது மிகப் பிரச்சனைக்குரிய விஷயம். குடும்பக்கட்டுப்பாடு செய்த தமிழ்நாட்டிற்கு தொகுதி குறையும், ஆனால் உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் குடும்பக்கட்டுப்பாடு முறை இல்லாத காரணத்தால் தொகுதி அதிகரிக்கும்..

தொகுதி பங்கீடு பிரிப்பதன் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகள் இழக்கப்படும், ஏற்கனவே தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது புதிய கணக்கெடுப்பின்படி பாராளுமன்ற சீட்டானது உயரும் என்றால் தமிழ்நாடு மீண்டும் வஞ்சிக்கப்படக்கூடிய நிலையானது ஏற்படும் என்று பேசினார்.

By Admin